• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பதஞ்சலி சாஸ்திரி பிறந்த தினம் இன்று..!

Byகாயத்ரி

Jan 4, 2022

சுதந்திர இந்தியாவின் இரண்டாவது உச்சி நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நவம்பர் 7, 1951 முதல் ஜனவரி 3, 1954 வரை இருந்தவர் மண்டகொளத்தூர் பதஞ்சலி சாஸ்திரி.தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் திருவண்ணாமலை மாவட்டம் மண்டகொளத்தூரில் பிறந்தார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியின் மூத்த சமஸ்கிருத பண்டிதர் கிருஷ்ண சாஸ்திரியின் மகனாக பதஞ்சலி சாஸ்திரி பிறந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து கலையிலும் சட்டத்திலும் பட்டப்படிப்பை முடித்த பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழில் ஆற்றி வந்தார். சில காலம் கழித்து மார்ச் 15, 1939ல் உயர்நீதிமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். டிசம்பர் 6, 1947ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் தலைமை நீதிபதியாக நவம்பர் 7, 1951ல் பொறுப்பேற்றார். இப்பதவியில் ஜனவரி 3, 1954 வரை பணியாற்றினார். பதஞ்சலி சாஸ்திரி பிறந்த தினம் இன்று..!