• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

முழு கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி

Byகாயத்ரி

Dec 31, 2021

கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதன் விளைவாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது.செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 2,200 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் வினாடிக்கு 2,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்றிவு 1000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது நீர்திறப்பு 2000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.