புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

அந்தமுறையில் இன்று 28-9-2026( திங்கட்கிழமை) பள்ளி வளாகத்தில் புற்கள் மற்றும் புதர்கள் அகற்றும் தூய்மைப்பணியினை முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் பார்வையிட்டு ஆய்வு செய்து பாதுகாப்பாக தூய்மைப்பணி மேற்கொள்வது குறித்து அறிவுரைகள் வழங்கினார்.
முதன்மைக்கல்வி அலுவலரின் ஆய்வின்போது மாவட்டச்சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர் வேலுச்சாமி, பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.





