• Tue. Sep 22nd, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

பள்ளி மேலாண்மைக்குழுவின் வாயிலாக கூட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் பேச்சு..,

Byமுகமதி

Sep 21, 2026

புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களில் பள்ளி மேலாண்மைக்குழுவின் வாயிலாக நியமனம் செய்யப்பட்ட சமூக அறிவியல் மற்றும் ஆங்கிலம் பாடங்கள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பணியிடைப்பயிற்சி இன்று 21-09-2026 ( திங்கட்கிழமை) புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் நடைபெற்றது.

இப்பணியிடைப் பயிற்சிக்கு முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது, பள்ளி மேலாண்மைக்குழுவின் வாயிலாக பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் முன்தயாரிப்புடன் சென்று மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கவேண்டும். உங்களது பணி சிறக்கவேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உங்களுக்கு பணியிடை பயிற்சி அறிவுறுத்தியுள்ளார்கள்.

பள்ளி மேலாண்மைக்குழுவின் வாயிலாக நியமனம் செய்யப்பட்ட நீங்கள் அனைவரும் மாணவர்களின் அடிப்படை கற்றல் செயல்பாடுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதுடன் அரசுப்பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறும் வகையில் சிறப்பாக செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் தேர்வு செய்யப்பட்ட பாட வல்லுனர்கள் கலந்துகொண்டு தன்னிடம் பயிலக்கூடிய அனைத்து மாணவர்களையும் எவ்வாறு தேர்ச்சி பெற வைப்பது என்பது பற்றியும்,100க்கு 100 மதிப்பெண் எவ்வாறு பெறுவது என்பது குறித்தும், பாட சராசரியை 80 மதிப்பெண்களுக்கு மேல் உயர்த்துவது குறித்தும் மடிக்கணினி உள்ளிட்ட வளர்ந்த தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி விரிவாகவும், விளக்கமாகவும் பயிற்சி அளித்தனர்.

இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் ( இடைநிலை) இராஜீ செய்திருந்தார். இந்நிகழ்வில் மாவட்டச்சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர் வேலுச்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர். பள்ளித்துணை ஆய்வாளர் குருமாரிமுத்து பணியிடை பயிற்சியினை ஒருங்கிணைப்பு செய்தார். 22-09-2026( செவ்வாய்கிழமை) கணிதம் மற்றும் தமிழ் பாடங்களுக்கும், 24-09-2026( வியாழக்கிழமை) அறிவியல் பாடத்திற்கும் பணியிடை பயிற்சி நடைபெற உள்ளது.

இதே போல அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழுவின் வாயிலாக நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பாட வாரியாக தனியாக பணியிடைப்பயிற்சி நடைபெற்று வருகிறது.