புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே புதிதாக மின்மாற்றி ஒன்று தமிழ்நாடு மின்சார வாரியத்தால் அமைக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அந்த இடத்தில் மின்மாற்றி அமைத்தால் ஏற்கனவே நாகநாதர் கோவில் ஒன்று இருக்கிறது.

விழா காலங்களில் பக்தர்கள் கூடும் இடமாக அந்த கோவில் இருப்பதால் அந்த இடத்தில் மின் மாற்றி அமைக்க கூடாது என்றும் வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கின்றனர். இது குறித்து அப்பகுதியில் உள்ள ஆட்டோ சங்க தலைவர் ரமேஷ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர் எஸ் எஸ் அமைப்பினருடன் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு அருணா அவர்களைச் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்திருக்கிறார்கள்.

இந்த ஒரு கோரிக்கைக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் ஆர் எஸ் எஸ் அமைப்பினரும் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



