விருதுநகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட திட்ட இயக்குனர் வனிதா
செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து உப்பத்தூர் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் தரை தளம் சேதமடைந்து உள்ளதால் குழந்தைகள் சிரமப்படுவதால் அதனை சரிசெய்து தருமாறு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோரிக்கை விடப்பட்டது.

அதன் பேரில் உடனடியாக சரிசெய்து தருகிறோம் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி கூறினார்கள். அதன் பேரில் பணிகள் நடைபெறுகிறது. ஒன்றிய பொறியாளர் முத்துக்குமார் நேரில் பார்வையிட்டார்.

சாத்தூர் தமிழக வெற்றிக்கழக ஒன்றியக் கழகச் செயலாளர் தங்கமுனியராஜா மற்றும் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.




