• Sat. Sep 19th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

காட்டழகர் கோவிலில் பிரம்மோற்சவ விழா..,

ByT. Vinoth Narayanan

Sep 19, 2026

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை செண்பகத்தோப்பு காட்டு பகுதியில் மலை மேல் காட்டழகர் கோயில் உள்ளது. இங்கு வருடம் தோறும் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா வெகு விமர்சியாக நடைபெறும்.

இந்த ஆண்டும் இன்று முதல் சனிக்கிழமை ஆனதால் அதிகாலை முதல் ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், மதுரை மாவட்டத்திலிருந்தும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை செண்பகத் தோப்பிற்கு வந்து அங்கிருந்து கால்நடையாக காட்டழகர் கோவிலுக்கு சென்றனர்.

இதில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர். அழகர் கோயிலில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அங்குள்ள வற்றாத நூபுர கங்கை நீரூற்றில் குளித்து பின்னர் அழகர் ஸ்ரீதேவி பூமாதேவி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் கோயில் நிர்வாகம் மற்றும் கோயில் பரம்பரை அறங்காவலர் குடும்பத்தினர் செய்திருந்தனர்.