• Thu. Sep 17th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

புதுக்கோட்டையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் பேட்டி….

ByS. SRIDHAR

Sep 17, 2026

புதுக்கோட்டையில் தந்தை பெரியாரின் 147-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு , அவரது திருஉருவ சிலைக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பர்வேஸ்,

தவெக அரசு மீது குற்றச்சாட்டுகள் எல்லாம் எதிர்க்கட்சிகள் வைப்பவை. மக்கள் ஆதரவோடு இடைத்தேர்தல் நடைபெறும் இரண்டு தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் அமோக வெற்றி பெறும்.

தலைமைச் செயலகம் பட்டினப்பாக்கத்தில் கட்டுவதால் மீனவர் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவது பற்றி கேட்ட போது,

தலைமைச் செயலகம் கட்டுவது குறித்து தற்பொழுது அனைத்து தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அது அரசு நல்ல முடிவு செய்யும்.

வெளிநாட்டு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதால் தமிழகத்தில் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைக்குமா என்பது பற்றி கேட்ட போது,

கண்டிப்பாக அந்நிய முதலீடுகளை முதலமைச்சர் அதிக அளவு ஈர்த்ததால் தமிழக இளைஞர்களுக்கும் தமிழக திறன் தொழிலாளர்களுக்கும் அதிகளவில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தமிழக தொழிலாளர்களுக்கு அதிக அளவில் நன்மை கிடைக்கும் என தெரிவித்தார்.

விஜய் சேதுபதி குறித்த கேள்விக்கு,

அது எல்லாம் அரசியல், மக்களைப் பற்றி கேளுங்கள். நோ கமெண்ட்ஸ் என்றார்.