• Thu. Sep 17th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சின்னமனூரில் 41 ஆம் ஆண்டு பிரம்மாண்ட விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்..,

தேனி மாவட்டம் சின்னமனூர்இந்து எழுச்சி முன்னணி சார்பில் 41 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கடந்த செப்டம்பர் 14-ம் தேதி சின்னமனூரில் வெகு விமரிசையாக தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்கள் தரிசனம் செய்தனர். நேற்று சிலைகள் கரைப்பு ஊர்வலம் நடைபெற்றது.

சுமார் 180-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் முத்தாலம்மன் கோவில் தெருவில் இருந்து மேளதாளத்துடன் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக புறப்பட்டது. இந்த ஊர்வலம் கண்ணாடிக்கடை முக்கு, செக்க முக்கு, தேரடி, அக்ரஹாரத்தில் இருந்து மெயின் ரோடு வழியாக சென்று முல்லைப் பெரியாறு ஆற்றில் கரைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் விநாயகர் சதுர்த்தி கமிட்டி ஒருங்கிணைப்பாளர் சமயகுமார் வரவேற்புரை ஆற்றினார். இந்து எழுச்சி முன்னணி நிறுவனத் தலைவர் பொன்.ரவி, மாவட்டத் தலைவர் ராமராம்ஜி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

சிறப்பு அழைப்பாளர்களாக கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா, கலந்து கொண்டனர்.

நகரத் தலைவர் சந்தன பாண்டியன் நகர பொதுச் செயலாளர் சிவசங்கர் இந்து எழுச்சி முன்னணி முக்கிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்

விநாயகர் ஊர்வலத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.