• Thu. Sep 17th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வாடிப்பட்டியில் பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்த நாள் விழா..,

ByKalamegam Viswanathan

Sep 17, 2026

முன்னாள் தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வாடிப்பட்டி பேருந்து நிலையம் முன்பு உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் அதன் நிர்வாகிகள் பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தொடர்ந்து பேரூர் செயலாளர் அசோக்குமார் அவர்களின் அருணா பேக்கரி முன்பு இருந்த 60 அடி கொடிக்கம்பத்தில் கட்சி கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இவ்விரு நிகழ்ச்சிகளிலும் வருகை தந்த அதிமுக நிர்வாகிகளை பேரூர் செயலாளர் டாக்டர் அசோக் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் உசிலம்பட்டி மகேந்திரன் அம்மா பேரவை வெற்றிவேல் மாவட்ட பொருளாளர் வக்கீல் திருப்பதி மாணவரணி செயலாளர் சோழவந்தான் சிவா ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன் காளிதாஸ் சி பி ஆர் மணி மலையாளம் மகேந்திர பாண்டி புளியங்குளம் ராமகிருஷ்ணன் எம் ஜி ஆர் மன்ற இனைச் செயலாளர் முடுவார்பட்டி ஜெயச்சந்திரன் மணியன் மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் வாவிட மருதூர் ஆர்.பி. குமார் பாசறை மணிமாறன் அச்சம்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் பண்ணை குடி மகாராஜன் கோட்டைமேடு பாலா சந்திரபோஸ் ஆசை கண்ணன் சோழவந்தான் பேரூர் துணைச்செயலாளர் தியாகு சரத் மன்னாடிமங்கலம் ராஜபாண்டி கல்லாங்காடு ராமு பிரேம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து வாடிப்பட்டி பேரூராட்சி செயலாளர் டாக்டர் அசோக் குமார் அவர்களின் அருணா பேக்கரி முன்பு அமைக்கப்பட்டு இருந்த 60 அடிஉயர கொடி கம்பத்தில் கட்சி கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் வாடிப்பட்டி பேரூர் செயலாளர் டாக்டர் அசோக் குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.