• Thu. Sep 24th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

அகில இந்திய நடிகராக மாறும் தெலுங்கு நடிகர் ராம்சரண்

தெலுங்கு நடிகர்கள் நடிக்கும் படங்கள் தற்போது இந்திய அளவில் பான் இந்தியா படங்களாக வெளியிடப்படுகின்றன. இதனால் தெலுங்கு நடிகர்கள் பலரும் தங்களது சம்பளத்தை தொடர்ந்து உயர்த்திய வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி உள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்துள்ளதன் மூலம் பான் இந்தியா நடிகராக மாறியுள்ள அல்லு அர்ஜுன், தற்போது தனது சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்தி உள்ளாராம். ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திற்கு அவர் ரூ.100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகில் 60 படங்களுக்கு மேல் நடித்து முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித்குமார்,விஜய் போன்றவர்கள் முறையே 70 முதல் 80 கோடி ரூபாய் அளவு சம்பளம் வாங்கி வரும் நிலையில், தெலுங்கில் 15 படங்கள் மட்டுமே நடித்துள்ள ராம்சரண் ரூபாய்100 கோடி சம்பளமாக வாங்குவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கு திரையுலகில் நடிகர்களுக்கு அதிகளவு சம்பளம் கொடுக்கப்படுவதால் தான் சமீப காலமாக தமிழ் திரையுலகை சேர்ந்த் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்கள் தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.