விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள ஒத்தையால் கிராமத்தில் பெருமாள் கோவில் அருகே உள்ள இடம் தொடர்பாக இரு தரப்பினர் சொந்தம் கொண்டாடி வருவதாகவும் பாதை தொடர்பாக இரு தரப்பினர் இடையே அடிக்கடி தகராறு மற்றும் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிய வருகிறது

இதனை அடுத்து இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று நில அளவீடு செய்ய அலுவலர்கள் வந்துள்ளனர்.

ஆனால் அந்த நிலத்தை அளக்க விடாமல் ஒரு தரப்பினர் கட்சி கொடியுடன் நில அளவர்களை வேலை செய்ய விடாமல் தடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
சாத்தூர் டிஎஸ்பி குருசாமி தலைமையில் போராட்டம் நடத்துபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எனினும் உடன்பாடு ஏற்படாததால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.



