• Tue. Oct 6th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ கிருஷ்ணசாமி இன்டர்நேஷனல் பள்ளியில் கிடோ ஃபெஸ்ட் நிகழ்ச்சி..,

ByK Kaliraj

Sep 23, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஸ்ரீ கிருஷ்ணசாமி இன்டர்நேஷனல் பள்ளியில் கிடோ ஃபெஸ்ட் நிகழ்ச்சி மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைவர். ராஜு, தலைமை வகித்தார். தாளாளர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் அருண்குமார் வரவேற்று பேசினார்.

பிரெயின்டெமிக்ஸ் (Braindemics) நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் ஜஸ்வந்த் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்.

மழலையர் வகுப்பு மாணவர்கள் தங்கள் பெற்றோர்களை அன்புடன் வரவேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். பாடல்கள், சிறு நாடகங்கள் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலம் தங்களது திறமைகளை அழகாக வெளிப்படுத்தினர். மாணவர்களின் உற்சாகமான பங்கேற்பும் தன்னம்பிக்கையுடன் கூடிய நிகழ்ச்சிப் படைப்புகளும் அனைவரது பாராட்டையும் பெற்றதுடன், இந்நிகழ்வை மறக்க முடியாத ஒரு இனிய தருணமாக மாற்றின.

பள்ளி முதல்வரின் சிறப்பான வழிகாட்டுதலின் கீழ், மழலையர் வகுப்பு ஆசிரியர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக மேற்கொண்டனர். அவர்களின் அர்ப்பணிப்பான பணியும் ஒருங்கிணைந்த முயற்சியும் நிகழ்ச்சியைத் திட்டமிட்டபடி சிறப்பாக நடத்துவதற்கு பெரிதும் உதவியது.

இவ்விழா, மழலையர் வகுப்பு மாணவர்கள் தங்களது படைப்பாற்றல், தன்னம்பிக்கை மற்றும் தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்ததுடன், பள்ளி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கிடையேயான அன்பான பிணைப்பையும் மேலும் வலுப்படுத்தியது.