• Fri. Sep 4th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாவூத்து மலை அடிவாரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய கல்லூரி மாணவ, மாணவியர்கள் ….

ByK Kaliraj

Sep 4, 2026

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மாவூத்து மலை அடிவாரப் பகுதியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் தூய்மை பணியை வட்டாட்சியர் சரஸ்வதி துவக்கி வைத்தார். ரெங்க நாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி சேர்மன் பிருந்தா ராகவன் முன்னிலை வகித்தார்.

ரிலிப் பவுன்டேசன் அறக்கட்டளை மற்றும் சாத்தூர் ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்திய இந்நிகழ்வில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் குழுக்களாக இணைந்து மலை அடிவாரம் மற்றும் கோவில் சுற்றுப்புறங்களில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் உள்ளிட்ட கழிவுகளை சேகரித்து அப்புறப்படுத்தினர்.

இதன் மூலம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியம் குறித்தும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.