மதுரை விராட்டிபத்து அருகே உள்ள ஓம் சாதனா CBSE பள்ளியில் இன்று கிருஷ்ண ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

இதில் நூற்றுக்கு மேற்பட்ட பள்ளி குழந்தைகள் கிருஷ்ணன்,ராதை போல் வேடமணிந்து பள்ளிக்கு வந்தனர்.
பள்ளிச் சிறுவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கிருஷ்ணன் ராதை வேடம் அணிந்து வந்து கிருஷ்ண ஜெயந்தி விழாவில் சிறப்பித்தனர். அவர்களுக்கு பள்ளி தாளாளர் கண்ணன் துணைவியார் சசிரேகா கண்ணன் மற்றும் பள்ளி முதல்வர் சுபாஷினி பரிசுகள் வழங்கி மாணவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு கிருஷ்ணன் ராதையின் கதைகள் சொல்லப்பட்டு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர் ராதை வேடமணிந்து பள்ளிக்கு வந்ததால் பள்ளி வளாகம் முழுவதும் திருவிழா போல் காட்சியளித்தது.









