விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் கொட்ட மடக்கிபட்டி கிராமத்தில் வராகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் நடந்தது. அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் சிறப்பு திருவிளக்கு மற்றும் யாக பூஜைகள் நடைபெற்றன.
திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் ஏழாயிரம் பண்ணையில் உள்ள வராகி அம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.




