விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒன்றியம் வெம்பக்கோட்டை ஒன்றியம் முத்தாண்டியாபுரம் ,கொம்மங்கியாபுரம், கங்கரகோட்டை, நதிக்குடி, முத்துச்சாமிபுரம், வெற்றிலையூரணி, வெம்பக்கோட்டை,அப்பையநாயக்கர்பட்டி, ,தாயில்பட்டி, இ.துரைசாமிபும், இ. எல்.ரெட்டியா பட்டி,, உள்ளிட்ட ஊராட்சிகளில் இரு நூறுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்திலிருந்து வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

வீடுகள் கட்டுவதற்கு மூன்று லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நான்கு கட்டமாக பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். வங்கியில் வரவு வைக்கப்பட்ட தொகையை பயன்படுத்தி பயனாளி கட்டிடப் பணியை செய்து வருவார்.

முதலில் அடித்தளம் அமைக்க ரூபாய் 85 ஆயிரம் வீட்டின் மேல் தளத்தில் கான்கீரிட் அமைக்க ரூபாய் 70 ஆயிரம் , கட்டுமானப்பணி முக்கால்வாசி முடிந்த பிறகு ஒரு லட்சத்து 10 ஆயிரம், வீட்டின் முன்புறம், வெளி பிரகாரத்தில் சிமெண்ட் பூச்சு மற்றும் கட்டுமானப் பணி முழுமையாக முடிந்த பிறகு மீதி ரூபாய் 85 ஆயிரம் என பயனாளிகளுக்கு வழங்கப்படும்.
ஆனால் இதுவரை குறைந்தபட்சம் இரண்டு தவணை தொகையான ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் ஒரு தவணை தொகை கூட வழங்காததால் பயனாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் வீட்டின் கட்டுமான பணிகள் நடைபெறாமல் உள்ளது.

ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயனாளிகளுக்கு வீடு கட்ட வழங்க வேண்டிய நிதியை தாமதமின்றி உடனடியாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.








