மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் சோழவந்தான் தொகுதி தமிழக வெற்றி கழகம் சார்பாக100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தாதம்பட்டி நீரேத்தான் வந்து திடலில் நடந்தது.இந்த கூட்டத்திற்குமாவட்டக் கழகச் செயலாளர் எம்.வீ. கருப்பையா எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.

ஒன்றிய செயலாளர்கள் தமிழன் தாமு,வழக்கறிஞர் தியாகராஜன், அய்யனார், சரவணன், கிருஷ்ணமூர்த்தி,தனசேகரன், கார்த்திக் ,ஹரிஷ், புகழ் பாண்டி, மாணிக்கம் ,ரஞ்சித் குமார் மற்றும் வழக்கறிஞர் அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட மகளிர் அணி செயலாளர்சுஜிதா வரவேற்றார்.இந்த கூட்டத்தில் சட்டம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:- சோழவந்தான் தொகுதியில் இதுவரை எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது இனி மாற்றம் உருவாகும். தி.மு.க .,அ.தி.மு.க .வந்து இதுவரை எதுவும் செய்யவில்லை சோழவந்தான் தொகுதியில் இரண்டு வருடத்துக்குள் அனைத்து தேவைகளும் நிறைவேற்றி தரப்படும். தமிழக மக்கள் மாற்றத்தை எண்ணி வாக்களித்தார்கள் அது கண்டிப்பாக நடைபெறும். அரசு அதிகாரி முதல்
மந்திரிகளும், எம்எல்ஏக்களும் மக்களுக்காக வேலை செய்தது இந்த 100 நாள் மட்டும் தான்.
முன்பு தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தேர்தல் முடிந்ததும் சென்று விடுவார்கள் அதன் பின் அவர்களை பார்க்கவே முடியாது. ஆனால் இது உங்களுக்கான அரசு உங்களுக்கானஅனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுக்கும். மக்கள் பணத்தை கொள்ளை அடித்தவர்கள் மீது வழக்கு தொடுக்கப்படும்.
மக்கள் வரிப்பணத்தை 500 கோடி ஆயிரம் கோடி கொள்ளை அடித்தவர்கள் நிச்சயம் தண்டனை அனுபவிப்பார்கள். இத்தனை நாள் பொருத்த மக்கள் இந்த தேர்தலில் அடித்தது துவைத்து வெளியே போட்டு விட்டார்கள்.

புரட்சித்தலைவர் தீய சக்தி திமுகவை ஒழித்துக் காட்ட வேண்டும் என்று அன்று சொன்னார் அதை ஜெயலலிதாவும் சொன்னார். ஆனால் இன்று அதை முதல்வர் விஜய் செய்து முடித்து விட்டார். அண்ணா அறிவாலையும் வெள்ளையடித்து வாடகைக்கு விடப்படும்.முரசொலி டிரஸ்டை யார் கைப்பற்றுவது என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். சோழவந்தான் தொகுதியில் 5 ஆண்டுக்குள் பெறும் மாற்றத்தை ஏற்படுத்தி காட்டுவோம் இவ்வாறு அவர் பேசினார்.இந்த கூட்டத்தில்

மாவட்ட இணை செயலாளர் பொன் ராமலிங்கம், மாவட்ட பொருளார் ராஜேஷ் கண்ணா,மாவட்டத் துணைச் செயலாளர்கள் அய்யனார் தனலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கவுன்சிலர் கொரியர் கணேசன், அரியூர் ராதாகிருஷ்ணன், அலங்காநல்லூர்பாலாஜி பாலகிருஷ்ணாபுரம் கருப்பையா,
ஜெயகுமார் உள்படஅனைத்து கழக நிர்வாகிகளும்கலந்து கொண்டனர்.முடிவில் வாடிப்பட்டி பேரூர் செயலாளர் பசுமணியன் நன்றி கூறினார்.





