• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடியவர் கைது..,

ByS.Ariyanayagam

Aug 23, 2026

கொடைரோடு அருகே காட்டுபன்றியை வேட்டையாடிய நபர் கைது செய்யப்பட்டார்.
காட்டுப்பன்றி கறிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல் சிறுமலை வன சரக வன அலுவலர் சுரேஷ் அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி சிறுமலை வனத்துறையினர் கொடைரோடு அருகே கொடைரோடு பிரிவு, சடையாண்டிபுரம் ஆகிய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது

ஒரு தட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி(41) என்பவர் வனப்பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடி வீட்டில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி சமைத்தது தெரியவந்ததை தொடர்ந்து வனத்துறையினர் ஆரோக்கியசாமியை கைது செய்து அவரிடமிருந்து காட்டுப்பன்றி கறிகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்தனர்.