• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வடகாடு கிராமத்தில் புதிய துளிர் இல்ல துவக்க விழா…,

Byமுகமதி

Aug 23, 2026

புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், திருவரங்குளம் வட்டாரக் கிளையின் சார்பில் வடகாட்டில் புதிய துளிர் இல்லத் துவக்க விழா நடைபெற்றது . இந்த விழாவிற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வட்டாரத் தலைவர் டிட்டோ தலைமை தாங்கினார் .

மாவட்ட துணைத் தலைவர் அறிவொளி கருப்பையா முன்னிலை வகித்தார். வட்டாரச் செயலாளர் ஆசிரியர் தியாகு வரவேற்புரை நிகழ்த்தினார் . சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில துணைத்தலைவர் வீரமுத்து அவர்கள் “ஏபிஜே அப்துல் கலாம் துளிர் இல்லம்” என்ற பெயரில் மாணவர்களுக்கான இல்லத்தையும் “கல்பனா சாவ்லா துளிர் இல்லம் என்ற மாணவிகளுக்கான துளர் இல்லம் ஆகிய இரண்டு துளிர் இல்லங்களைத் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள் .

அவர் தனது உரையில் “துளிர் இல்லத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும், துளிர் இல்ல மாணவர்களளின் கடமைகள் துளிர் இல்ல செயல்பாடுகளால் கிடைக்கும் நன்மைகள் எதிர்கால வாய்ப்புகள் குறித்து சிறப்புரையாற்றினார். பின்னர் இரண்டு துளிர் இல்லங்களுக்கான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பின்னர் மாணவர்கள் அனைவரும் அறிவியல் மனப்பான்மை உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிறைவாக ஆசிரியர் ரஞ்சனி அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.