தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பின்படி புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் மாவட்டத் தலைவர் DD. பெனட் அந்தோணி ராஜ் அவர்கள் ஆலோசனையின் பேரில் புதுக்கோட்டை காந்தி பூங்கா அருகில் மாலை 6.00 மணியளவில் மாணவர்களுக்கு எதிரான நீட் தேர்வினை ரத்து செய்யக் கோரியும்

மாணவர்களிடம் ஒன்றிய பா ஜ க அரசும் பிரதமர் நரேந்திர மோடியும் மன்னிப்பு கேட்க கோரியும் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன பேரணி முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் மாநில பொதுக்குழு உறுப்பினர் V. முருகேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் புதுக்கோட்டை நகராட்சி நகர் மன்ற முன்னாள் தலைவர் துரை. திவியநாதன் அவர்கள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர்கள் ஆலங்குடி தமிழ்ச் செல்வன் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வேங்கை அருணாசலம் சிவக்குமார் மாநில செயற்குழு உறுப்பினர் தனபதி மாநகர தலைவர்கள் மதன் கண்ணன் பாரூக் ஜெய்லானி வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் சூர்யா பழனியப்பன், வீ. தமிழ்ச்செல்வன் மாவட்ட கலைப் பிரிவு தலைவர் மேப் வீரையா, செயலாளர் மயில்வாகனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் மேலும் வட்டாரத் தலைவர்கள் தங்கசிவா பொதுச்செயலாளர் எம் ஏ கே சேட்டு மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் குட்லக் அப்துல்லா, திருக் கட்டளை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெயபாலன், மகளிர் அணித் தலைவர்கள் கவுரி, சிவந்தி நடராஜன், மாநகர மகளிர் அணித் தலைவர் சசிகலா இந்திரா உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் எனவும் மாணவர்களிடம் ஒன்றிய பா ஜ க அரசும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என கோசங்களை எழுப்பினர்.





