• Mon. Jul 27th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

நலத்திட்ட உதவி வழங்கும் விழா!!

ByS. SRIDHAR

Jul 27, 2026

புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கத்தின 12 ஆம் ஆண்டு பணியேற்பு விழா சங்கத் தலைவர் குட்லக் AR.முகமது அப்துல்லா தலைமையேற்று வரவேற்புரை ஆற்றினார் நிகழ்ச்சி புதுக்கோட்டை SAK மஹாலில் நடைபெற்றது ரோட்டரி பிரார்த்தனை மேனாள் தலைவர் R.சிவக்குமார் வாசித்தார்.

ரோட்டரி செய்திகளை வருங்கால தலைவர் K.ஓம்ராஜ் கூறினார் 2026-27 ஆம் ஆண்டின் தலைவராக S.அப்துல் ரகுமான் @ சேட் அவர்களுக்கும் செயலாளராக K.மணிகண்டன் அவர்களுக்கும் பொருளாளராக கண.மோகன் ராஜா ஆகியோருக்கு ரோட்டரி மாவட்டம் 3000தின் ஆளுநர் 2026-27 R.சுப்ரமணி @ RBS சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணியேற்பு விழாவினை செய்து வைத்து வாழ்த்துரை வழங்கினார் மேலும் மாண்புமிகு அமைச்சர் அவர்களை புதிய உறுப்பினராக பின் அணிவித்து சங்கத்தில் இணைத்து வைத்தார் நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு J.முகமது பர்வேஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல விழிப்புணர்வு பணியினை சிறப்பாக செய்ததை பாராட்டி குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி ச.ரேவதி துரை அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு விழிப்புணர்வு பணியினை சிறப்பாக செய்தமையை பாராட்டி மாவட்ட வன அலுவலர் S.கணேசலிங்ம் அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருது வழங்கியும், செய்தி மக்கள் விழிப்புணர்வு பணியினை பாராட்டி புதுகை FM.91.2 ஸ்டேஷன் இயக்குனர் முனைவர் S.விஜியக்குமார் அவர்களுக்கு விருதும் சான்றிதழும் வழங்கியும் புதுக்கோட்டை அப்பர் பிரைமரி பள்ளி மாணவ மாணவிகள் 12 பேருக்கு புத்தகப்பை வழங்கியும், துப்புரவு பணியாளர்கள் 15 பேருக்கு அரிசி வழங்கியும் பாண்டியன் லட்சுமணன் ஆகிய இரண்டு பேருக்கு சலவைப் பெட்டி ஆகியவற்றை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்வில் புதிய உறுப்பினர்கள் 30 பேரை மண்டல ஒருங்கிணைப்பாளர் S.கதிரேசன், துணைஆளுனர் M.சித்ராதேவி ராமதாஸ் ஆகியோர் ரோட்டரி பின் அணிவித்து சங்கத்தில் இணைத்து வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் S.பார்த்திபன், B.அசோகன், VRM.தங்கராஜா, R.சங்கர் A.சந்திரசேகர்,
K.குஞ்சிதபாதம் SM.ஆராமுதன், முன்னிலை வகித்தனர் மேலும் இரண்டு அரசு பள்ளிகளுக்கு கழிப்பறை வசதி கட்டுவதற்கான படிவத்தை தலைவர் வழங்க ஆளுநர் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியினை சேது கார்த்திகேயன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி மற்றும் உணவு ஏற்பாடுகளை சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் உறுப்பினர்கள் புதிய உறுப்பினர்கள் நண்பர்கள் இணைந்து செயல்படுத்தினர். முன்னதாக கலைச்சுடர் மணி முத்து முகமது குழுவினரில் இன்னிசை விருந்து நடைபெற்றது. நிறைவாக செயலாளர் K.மணிகண்டன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.