• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விவசாய சங்கங்கள் சார்பாக பரப்புரை இயக்கம்..,

Byமுகமதி

Sep 9, 2026

ஒன்றிய மாநில அரசுகளின் தொழிலாளர், விவசாயி, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள், சார்பாக பரப்புரை இயக்கம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் நடைபெற்றது.

இந்த பரப்புரை நிகழ்விற்கு தொழிற்சங்க தலைவர் சுபா.மணிமொழியன் தலைமை தாங்கினார், இந்த பரப்புரைக்கு AITUC மாவட்ட தலைவர் A.பெரியசாமி முன்னிலை வகித்தார்.

நிகழ்வில் மேலும் காவிரி நீர் கடைமடைப்பாசன சங்கத் தலைவர் கொக்குமடை ரமேஷ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் இரா.ராதாகிருஷ்ணன், AITUC மாவட்ட நிர்வாகி சீனிசேதுராமன், க.ராமலிங்கம், கோவிந்தராஜ், மற்றும் தொழிற்சங்க மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி மக்கள் மத்தியில் துண்டு பிரசுரங்கள் வழங்கி பரப்புரை இயக்கம் நடைபெற்றது.

இந்தப் பரப்புரையில் (1)காவேரி நீர் உரிமையை நிலைநாட்ட தமிழ்நாட்டின் பங்கை தர நடவடிக்கை எடு!மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசை அனுமதிக்காதே! (2) ஒன்றிய அரசின் நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை ஏற்கமாட்டோம் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் ஏற்று. (3) முடங்கியுள்ள முத்தரப்புக் குழுக்களை விரைந்து அமைத்து செயல்படுத்து. (4) ஒன்றிய அரசின் வழியில் பொதுத்துறை பொதுச் சேவைகளைத் தனியார் மயமாக்கும் உபயோகமற்ற கொள்கையைக் கைவிடு. (5) மின்சாரம், போக்குவரத்து, டாஸ்மாக், சிவில் சப்ளை, உள்ளாட்சி, மருத்துவம், திட்டப் பணியாளர் உள்ளிட்ட துறைகளின் ஒப்பந்த முறையை கைவிடு. தொழிலாளர்களின் பணி நிரந்தரக் கோரிக்கைகள் மீது தீர்வு காண வேண்டும்.

(6) கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். (7) குறைந்தபட்ச ஊதிய அரசாணைகளை மறுவரையறை செய்து ரூபாய் 42,000-க்குக் குறையாமல் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்து அமலாக்கு. (8) கட்டுமானம் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் ஒன்றிய அரசின் சட்டத்தால் முடங்கும் நிலையை தடுத்திடு. (9) காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட மேகதாது அணைக் கட்டுமானத்தைத் தடுக்க உரிய சட்டப் போராட்டத்தின் மூலம் நடவடிக்கை எடு! (10) விவசாயத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு உரிமையைப் பறிக்கும் விஜி ராம்ஜி திட்டத்தை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசே விவசாயத் தொழிலாளர்களுக்கு வாக்குறுதி அளித்தவாறு 150 நாட்கள் வேலை வழங்கத் தக்க முழுமையான நிதியை ஒதுக்கி, வேலை வழங்குவதை உறுதி செய்! (11) போராடும் ஜனநாயக உரிமைகளை பறிக்கும் அடக்குமுறையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டது.