புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கர்ம வீரர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் விழாவினையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னெடுக்கும் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் இயக்கத்தின் கையெழுத்து மற்றும் கை அச்சு பதிவு நிகழ்ச்சி

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆபிசர் ஸ் கிளப் அருகில் மாவட்ட தலைவர் DD. பெனட் அந்தோணி ராஜ் அவர்கள் தலைமையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் முருகேசன், ஆலங்குடி தமிழ்ச் செல்வன், துணைத் தலைவர்கள் வேங்கை அருணாசலம், எம் ஏ எம் தீன், சிவக்குமார், மாநகரத் தலைவர்கள் மதன் கண்ணன், பாரூக், ஜெய்லானி, வட்டாரத் தலைவர் சூர்யா பழனியப்பன், மாநில வழக்கறிஞர்கள் பிரிவு துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் தனபதி, பழனிசாமி பாலாண்டார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு J. முகமது பர்வேஸ் அவர்கள் கலந்து கொண்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள காமராஜர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தும் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் மக்கள் இயக்கத்தின் பாதாகைகளில் கை அச்சு மற்றும் கையெழுத்திட்டு துவங்கி வைத்தார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் பொதுமக்கள் அரசு அலுவலர்கள் மாணவ மாணவியர் தன்னார்வத்துடன் கை அச்சு மற்றும் கையெழுத்திட்டு அங்குள்ள காமராஜர் ராகுல்காந்தி படத்துடன் சுயசார்பு படம்( செல்பி) எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் SAS சேட்டு, தமிழக வெற்றிக் கழகப் பொருளாளர் தனசேகரன், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கலைப் பிரிவு தலைவர் மேப் வீரையா, மாமன்ற உறுப்பினர் ராஜா முகமது, வட்டாரக் காங்கிரஸ் தலைவர்கள் வீசா. இ. விஜி, சங்கிலி முத்து, சண்முகம், கீரனூர் பாஸ்கர், திருக் கட்டளை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெயபாலன், திருவரங்குளம் ஒன்றிய கவுன்சிலர் துரைக்கண்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் தினேஷ் குமார், காந்தி நகர் ராதாகிருஷ்ணன், திருவப்பூர் மணி, ஆறுமுகம், காதர் மைதீன், அனீஸ் ரஹ்மான், நாச்சிமுத்து, மாவட்ட ஓபிசி அணியின் தலைவர் ஆனந்தன், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவுத் தலைவர் குட்லக் அப்துல்லா, எஸ் ஏ. காதர், எம் ஏ கே. சேட்டு, மாவட்ட சேவா தளம் நிர்வாகி ஓம் ராஜ், கறம்பக்குடி வீரையா, செம்பாட்டூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் செம்பை மணி, கம்மங்காடு கருப்பையா, ராமலிங்கம், கருணாநிதி, பெருங்களுர் சுப்பிரமணியன், மாயழகு ராஜிவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பு நிர்வாகி ராஜகோபால் வாராப்பூர் ராமமூர்த்தி தகவல் தொடர்பு அணி சரவணன் சண்முகசுந்தரம் சகாய ராஜ் இருதயநாதன் மகளிர் காங்கிரஸ் நிர்வாகி கவுரி உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தமிழக வெற்றி கழகத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் பெனட் அந்தோணி ராஜ் தமிழக அளவில் காங்கிரஸ் கட்சியில் இதுவரை எந்த அமைச்சர்களும் கலந்து கொள்ளாத நிலையில் புதுக்கோட்டை மாவட்ட அமைச்சரும் தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சருமான முகமது பர்வேஸ் அவர்கள் கலந்து கொண்டது எங்களுக்கு மிகப் பெருமையாக இருக்கிறது என்றார்.




