• Tue. Jul 14th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

இளைஞர்கள் மண்ணெண்ணெய் கேனுடன் மரத்தின் மீது ஏறி தற்கொலை முயற்சி..,

ByKalamegam Viswanathan

Jul 14, 2026

இந்த நிலையில் சின்ன உடைப்பு கிராமத்தில் மட்டும் விரிவாக்கத்திற்காக 146 நபர்களின் வீடுகள் மற்றும் நிலங்கள் என 189 ஏக்கர் நிலம் கையகபடுத்த உள்ளதாக கடந்த 2009 ஆம் ஆண்டு அதிகாரிகள் தெரிவித்து. அதற்கான பணிகளை செய்து வந்த நிலையில் 2009 ம் ஆண்டு அப்போதைய நில மதிப்பீடு கணக்கிடப்பட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு பயனாளிகளுக்கு நிதி வழங்கப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

தற்போது ஊருக்கு வெளியே விமான நிலைய சுற்றுச்சுவர் எழுப்பும் பணிகள் நிறைவடைந்த நிலையில் சின்ன உடைப்பு கிராமத்தில் நிலங்களை கையகப்படுத்தும் பணியை தொடங்க உள்ளதாக விமான நிலைய வட்டாரத்தில் தகவல் தெரிவித்ததால் இப்பகுதி மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லை எனவும் 2009 கணக்கெடுப்பின்படி வழங்கப்பட்ட நிதியை, 2013 நில எடுப்பு சட்டப்படி கணக்கிட்டு வழங்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் கட்டமாக இழப்பீடு தொகை பெற்ற 64 நபர்களுக்கு மீள்குடி அமர்வுக்கு பெருங்குடி அருகே இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் நோட்டீஸ் வழங்கப்பட்டு வெளியேறுமாறு விமான நிலைய நில எடுப்பு தாசில்தார் தெற்கு வருவாய் துறையினர் பொதுமக்களிடம் கையொப்பம் பெறப்பட்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் சின்ன அடுப்பு கிராமத்தில் 250 குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் 64 வீடுகளுக்கும் பொய்யான தகவல் கொடுத்து வழங்கப்பட்டு இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

மதுரை சின்ன உடைப்பு கிராமத்தில் விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கிராமத்திற்கு செல்லும் பாதையை மறைத்து ஆர்ப்பாட்டம்.

நோட்டீஸ் வழங்குவதற்காக வந்த அதிகாரிகளை விரட்டி விட்டு சாலையை மரங்களை வைத்து மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை தெற்கு தாசில்தார் வளர்மதி சின்ன உடைப்பு கிராமத்திற்கு வருகை தந்த நிலையில் கிராமத்திற்கு உள்ளே விடாமல் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர் காவல்துறை பாதுகாப்புடன் கிராம மக்களுடன் மக்களுடன் பேச்சுவார்த்தை செய்தனர்.

வரும் 20 ஆம் தேதி குடியிருப்பில் காலி செய்ய நோட்டீஸ் வழங்க வந்த அதிகாரிகளை கிராமத்திற்கு செல்லும் பாதையில் மறித்து கிராம மக்கள் பேச்சுவார்த்தையில் மீள்குடி அமர்வு, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை செய்து தந்த பின்பு நிலத்தை கையகப்படுத்த வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை. வைத்தனர்.

அகற்ற இருக்கும் வீடுகளில் இருந்து உடைமைகளை எங்கு எடுத்துச் செல்வதென கிராம மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். திடீரென இளைஞர்கள் மண்ணெண்ணெய் கேனுடன் மரத்தின் மீது ஏறி தற்கொலை முயற்சி செய்ய முற்பட்டனர். இதனால் சிறிது நேரம் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

இந்த நிலையில் மதுரை தெற்கு தாசில்தார் ஒரு தலைமையிலான குழுவினர் உடனடியாக சம்பவத்தில் இருந்து மேலதிகாரிகளிடம் ஆலோசனை செய்து வருவதாக தெரிவித்து சென்றனர்.