• Mon. Jun 22nd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உசிலம்பட்டி வட்டார பொதுக்குழு கூட்டம்..,

ByP.Thangapandi

Jun 22, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டார கல்வி வளாகத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உசிலம்பட்டி வட்டார பொதுக்குழு கூட்டம் வட்டாரத் தலைவர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது.,

இதில் ஆசிரியர்களின் முறையற்ற தணிக்கை தடை, 5400 ஊதிய முரண்பாடு, மாணவர் நலன் கருதி ஆசிரியர் பணி நீடிப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.,

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் சீனிவாசன்.,

புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசிற்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.,

பொதுக்குழு கூட்டத்தில் கடந்த காலங்களில் ஆசிரியர்கள் பெற்று வந்த ஊதியம் மாற்றம் மற்றும் ஊதிய உயர்வுகள் பதிவு உயர்வுக்கான ஊதிய நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு ஊதிய நடவடிக்கைகளில் மேற்கொள்வதற்காக தமிழக அரசு 2018 ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 286 கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு தணிக்கை தடை என்ற பெயரில் பல்வேறு இன்னல்களுக்கு ஓய்வு பெறும் ஆசிரியர்கள் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை சிறப்பு நிலை பெற முடியாத சூழ்நிலையை தணிக்கை தடை என்ற பெயரில் ஏற்படுத்தி உள்ளது.,

2018 ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை 286 அரசாணையை கிடைப்பில் போட்டதின் விளைவாக தமிழக முழுவதும் பல்வேறு ஊதிய நிர்ணயங்களில் ஊக்க ஊதியவர்களின் நீதிமன்றங்களை நாட வேண்டிய அவல நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறு நீதிமன்றங்களின் நாடும்போது ஆசிரியர்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வெளிவரக்கூடிய நிலையில் அந்தத் தீர்ப்பின் எல்லா தீர்ப்புகளிலும் 90 சதவீதம் சுட்டிக்காட்டப்படும் தணிக்கை துறையினர் மிகவும் கவனமாக கருத்தில் கொண்டு ஆசிரியர்களின் தணிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கல்வியாண்டின் தொடக்கத்தில் பணிபுரிகின்ற ஆசிரியர்களை ஓய்வு பெறும் பொழுது மாணவர்களின் கல்வி நலன் கருதி தமிழக அரசே அரசாணை எண் 261 அதனைத் தொடர்ந்து 115 இரண்டு அரசாணைகளை பிறப்பித்து மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்காமல் இருக்க கல்வியாண்டின் இடையில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு இந்த கல்வியாண்டின் இறுதிவரை பணி மறு நியமனம் என்பது வழங்கப்படுவது தோன்றுவதற்கு நடைபெறும் செயலாகும்., ஜூன் மாதம் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு இந்த கல்வியாண்டின் இறுதி வேலை நாளாக இருக்கக்கூடிய வேலை நாள் வரை பணி மறு நியமனத்தை தமிழக அரசு வழங்குவதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்க வேண்டும்.,

இந்த கோரிக்கைகளை முன்வைத்து தமிழக அரசு ஆசிரியர்களுக்கு சாதகமான உத்தரவுகளை சரியான உத்தரவுகளை பிறப்பிக்கவில்லை எனில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எங்களது மாவட்ட மாநில அமைப்புகள் மேற்கொள்ளும் என பேட்டியளித்தார்.,