• Mon. Jun 22nd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

மரக்கன்றுகளை பயனாளிகளுக்கு வழங்கிய எம்ஜிஆர் மக்கள் அறக்கட்டளை..,

Byமுகமதி

Jun 22, 2026

புதுக்கோட்டையை அடுத்த மேட்டுப்பட்டியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மக்கள் அறக்கட்டளையின் சார்பில் தென்னங்கன்றுகள் உட்பட நூற்றுக்கணக்கானோருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

மேட்டுப்பட்டியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மக்கள் அறக்கட்டளை என்கிற பெயரில் ஜே கே என் செல்லையா என்பவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். தனது சம்பாத்தியத்தில் இருந்து ஒரு சிறு பகுதியை அறக்கட்டளை ஏற்படுத்தி அதன் மூலம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த காலங்களில் மாணவ மாணவியருக்கு எழுது பொருட்கள் நோட்டு புத்தகங்கள் சீருடைகள் போன்றவை வழங்கி இருக்கிறார். தற்போது பள்ளி மாணவ மாணவியருக்கு அனைத்தும் அரசு சார்பில் இலவசமாக கிடைத்து விடுவதால் வேறு பல நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று தமிழக முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தனது அறக்கட்டளையின் மூலம் தென்னங்கன்றுகள் உட்பட நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும் மேட்டுப்பட்டி கேட் என்ற இடத்தில் உள்ள நான்கு வழிச்சாலையில் நடுப்புறத்தில் ஏற்கனவே நட்டு வைத்திருந்த பல அரளிச்செடி போன்ற கன்றுகள் இழந்திருந்த இடங்களில் மீண்டும் அதே இடத்தில் அரளிச்செடிகள் குரோட்டன்ஸ் போன்ற செடிகளையும் நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார்.

நூற்றுக்கணக்கான மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வில் ஜே கே என் செல்லையா தலைமையில் திருநங்கை கயல் முன்னிலையில் அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் எஸ் பி ஆறுமுகம். பிரகாஷ், விஜய் போன்றவர்களும் கலந்து கொண்டு இந்த மரக்கன்றுகளை வழங்கி சிறப்பித்தனர். பல்வேறு மரக்கன்றுகள் வழங்கினாலும் மரக்கன்றுகள் வழங்குபவர்கள் தென்னங்கன்று போன்றவற்றை வழங்குவதில்லை. விலை அதிகம் என்ற போதிலும் 10க்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த அறக்கட்டளையின் மூலம் தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கலாகும்.

இது குறித்து அறக்கட்டளையின் நிறுவனர் ஜே கே என் செல்லையா குறிப்பிடுகையில் நான் தீவிரமான எம்ஜிஆர் ரசிகன். ஆனால் எம்ஜிஆர் பிறகு இப்போது விஜய் அவர்களுக்கு தான் சினிமாவிலும் அரசியலிலும் முக்கியத்துவம் கிடைத்திருக்கிறது. அதை போற்றும் விதமாகத்தான் எங்களது அறக்கட்டளையின் சார்பில் மக்களுக்கு இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன என்று தெரிவித்தார்.