சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மாநிலம் காரைக்கால் உள் விளையாட்டு அரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை பள்ளி கல்வி இயக்குனரகம் மற்றும் ஆயுஷ் இயக்குனரகம் இணைந்து நடத்திய பன்னிரண்டாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற யோகா பயிற்சியில் புதுச்சேரி மாநில அமைச்சர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர் யோகா பயிற்சி என்பது மனம் உடல் சிந்தனைஆகிய மூன்றையும் ஒன்றிணைக்க கூடியது எனவும், மனமும் உடலும் ஒன்றிணைந்தால் நிறைய சாதனைகளை நிகழ்த்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார். யோகா பயிற்சிகளை மேற்கொள்வதால் வயது முதிர்ந்த தோற்றம் இல்லாத மனிதர்களை உருவாக்குவது இந்தப் பனிரெண்டாவது யோகா தினத்தின் நோக்கமாக உள்ளதாகவும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நம் நாட்டில் உருவான யோகாவை உலக நாடுகள் முழுக்க கொண்டு சேர்த்திருப்பதாகவும் தெரிவித்தார். பள்ளி கல்லூரிகளில் உடற்பயிற்சிக்கு என்று தனி வகுப்பு இருப்பது போல யோகா பயிற்சிக்கும் தனி வகுப்பு ஏற்பாடு செய்யப்படும் எனவும் அமைச்சர் ஜி என் எஸ் ராஜசேகரன் தெரிவித்தார்.

இந்த யோகா பயிற்சியில் 500க்கும் மேற்பட்டோர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். பயிற்சியில் பாதஹஸ்தாசனம், திரிகோண ஆசனம், வஜ்ராசனம், அர்த்தஹலாசானம் உள்ளிட்ட ஆசனங்களும், நாடி சுத்தி, ப்ராமரி, சீத்தலி போன்ற ப்ராணய பயிற்சியும் போன்ற பயிற்சிகளும் நடைபெற்றன. இதில் மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் காவல் துறை அதிகாரிகள் மற்றும் 500க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி வாசிக்கப்பட்டது. யோகா பயிற்சி ஈடுபட்ட மாணவர்களுக்கு நிகழ்ச்சியின் இறுதியில் காலை உணவு வழங்கினார்.




