அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதுக்கோட்டையில் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்

அதிமுகவில் நடைபெற்ற உட்கட்சி பூசலினால் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எடப்பாடி பழனிச்சாமி பதவி நீக்கம் செய்தார். அதனைத் தொடர்ந்து பழனிவேல் என்பவரை வடக்கு மாவட்ட செயலாளராக அறிவித்தார்.
தொடர்ந்து அதிமுக சார்பில் கட்சி பணிகளை பழனிவேல் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
இன்று சபாநாயகர் இடம் முன்னாள் அமைச்சரும் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான சி விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்ததற்கு புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் பழனிவேல் தனது ஆதரவாளர்களுடன் வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்எல்ஏ பதவி ராஜினாமா செய்ததற்கு அதிமுக சார்பில் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.




