• Tue. Jun 16th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

உலக யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு யோகாசனம்..,

ByS.Ariyanayagam

Jun 16, 2026

வத்தலக்குண்டு அரசு நடுநிலைப் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு யோகாசனம் நடந்தது. சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவு சார்பில் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் “Yoga for Healthy Ageing” கருப்பொருளை மையமாகக் கொண்டு முதியோர் நல யோகா வழங்கப்பட்டது.

தலைமுறைகளுக்கிடையேயான பிணைப்பை வலுப்படுத்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுவாசப் பயிற்சி மற்றும் மனஅழுத்த மேலாண்மை அமர்வு நடத்தப்பட்டது.கண் பயிற்சிகள் மற்றும் கண் கழுவும் கப் (Eye Wash Cup) பயன்படுத்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. தேவையுடையோருக்கு கண் கழுவும் கப்புகள் வழங்கப்பட்டன.

ஆரோக்கியமான உணவுமுறை குறித்த உணவு ஆலோசனை வழங்கப்பட்டது.
கைதட்டல் சிகிச்சை பயிற்சி அளிக்கப்பட்டது. உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டது.
விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
ஆண் பணியாளர்கள் – 3
பெண் பணியாளர்கள் – 12
ஆண் மாணவர்கள் – 102
பெண் மாணவர்கள் – 205
மொத்த பயனாளிகள் – 322 பேர் பங்கேற்றனர். வத்தலக்குண்டு அரசு மருத்துவமனை டாக்டர் தனுஷியா தேவி பயிற்சிகளை நடத்தினார்.