• Thu. Jun 18th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

கொடைரோடு சுங்க சாவடி ஊழியர்கள் சம்பளம் வழங்க கோரி திடீர் தர்ணா போராட்டம்..,

ByPuthar Pandian P

Jun 18, 2026

திண்டுக்கல் – மதுரை செல்லும் நான்கு வழிச் சாலையில் கொடை ரோடு சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. இந்த சுங்க சாவாடி யில் 50க்கும் மேற்பட்டோர் ஊழிங்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இங்கு பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு கடந்த மே மாதம் சம்பளம் வழங்க வில்லை, இதனை தொடர்ந்து சம்பளம் வழங்க கோரி சுங்க சாவடி ஊழியர்கள் அலுவலக வாசலில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் சுங்கச் சாவடியில் வாகனங்கள் இயக்க 3 ஊழியர்களை வைத்து மட்டும் இயக்கி வருகின்றனர்.

இதன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது . மேலும் உடனடியாக சம்பளம் கொடுக்க வலியுறுத்தி போராட்டத்தை ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்.
திடீர் போராட்டத்தில் சுங்க சாவடி ஊழியர்கள் ஈடுபட்டதால் கொடைரோடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.