• Sun. Sep 20th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

வீட்டை உடைத்து 60 சவரன் நகை திருட்டு..!

ByM.I.MOHAMMED FAROOK

Jun 15, 2026

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நிரவி இரண்டாவது சாலையில் வசித்து வருபவர் சிவகுமார் (56). இவர் கடந்த 13 ஆம் தேதி தனது குடும்பத்தோடு வெளியூர் சென்றுள்ளார். இதனை அடுத்து நேற்று இரவு குடும்பத்தோடு வீடு திரும்பிய சிவகுமார், வீட்டின் பின்புற கதவு உடைந்து 60 சவரன் தங்க நகை திருட்டு போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவகுமார் உடனடியாக நிரவி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நிரவி காவல் நிலைய போலீசார், சிவகுமார் வீட்டில் நிரவி போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் திருட்டு நடந்த பகுதி மற்றும் அருகில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து 60 சவரன் நகை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.