• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பட்டை நாமம் போட்டு நூதன போராட்டம்..,

ByP.Thangapandi

Jun 1, 2026

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக விற்கு மாற்றாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழக அரசு புதிதாக பதவியேற்ற நிலையில் தமிழகத்தில் சிறு குறு விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் தள்ளுபடி என சில தினங்களுக்கு முன்பு அறிவித்த சூழலில்,

இதற்கு தமிழகத்தில் உள்ள விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற சூழலில்

இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தமிழக அரசு கூட்டுறவு சங்கங்களின் விவசாய பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி பட்டை நாமம் போட்டு விவசாய சங்கத்தினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பயனளிக்காத கூட்டுறவு பயிர் கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம், தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் தேர்தல் வாக்குறுதி படி கடன் தள்ளுபடி அறிவிக்க வேண்டும், சிறு குறு விவசாயிகளுக்கு முழு பயிர் கடன் தள்ளுபடி பெரு விவசாயிகளுக்கு 50% கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசே விஜய் அரசே தள்ளுபடி செய் தள்ளுபடி செய் கூட்டுறவு சங்கங்களின் விவசாய பயிர் கடன்களை தள்ளுபடி செய் தள்ளுபடி என கண்டன கோஷங்களை எழுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.