• Sun. May 31st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

பெ.நா.பாளையத்தில் ஆவின் பால் லாரி கவிழ்ந்து விபத்து..,

BySeenu

May 31, 2026

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் நள்ளிரவு 1 மணியளவில் ஆவின் பால் ஏற்றி வந்த மினி லாரி விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இதில் வண்டியில் இருந்த பால் டிப்பர்கள் சாலையில் விழுந்து சேதமடைந்தது. சம்பவ இடத்திற்கு நேரில் வந்த மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த மீட்பு பணிகளை பார்வையிட்டார்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவை மேட்டுப்பாளையம் சாலையில் ராமகிருஷ்ணா அருகே உள்ள மேம்பாலத்தின் முன்பாக பேரூர் பச்சாபாளையத்தில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு ஆவின் பால் ஏற்றி வந்த வாகனம் நள்ளிரவு 1 மணிக்கு விபத்துக்குள்ளாகி தலைக்கு குப்புற கவிழ்ந்தது.

வாகனத்தை செந்தில்குமார் என்பவர் ஓட்டி வந்த நிலையில் விபத்தில் யாருக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை. இதில் வண்டியில் இருந்த பால் டிப்பர்கள் சாலையில் விழுந்து சேதமடைந்தது. விபத்து நடந்த தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விபத்துக்குள்ளான வாகனத்தை மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.