• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கோவை ஆர்.எஸ்.புரத்தில் அனல் பறந்த ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ திருவிழா..,

BySeenu

May 31, 2026

ஞாயிற்றுக்கிழமை காலைப் பொழுதை அசாத்திய உற்சாகத்துடனும், எல்லையற்ற மகிழ்ச்சியடனும் கொண்டாடும் நோக்கில், கோவையின் ஆர்.எஸ்.புரம் (R.S. Puram) டி.பி. ரோட்டில் இன்று காலை ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ (Happy Street) நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக அரங்கேறியது.

கோவையின் ஒட்டுமொத்த இளசுகளும் ஒரே வீதியில் ஒன்று திரண்டு ஆடிப் பாடி மகிழ்ந்த ‘லைவ்’ காட்சிகள் ஒட்டுமொத்த கோவை மாநகரையும் ‘வைப்’ செய்ய வைத்து உள்ளது.

வாராந்திர வேலைப் பளு, மன அழுத்தம் மற்றும் செல்போன் உலகிற்குள் மூழ்கிக் கிடக்கும் இன்றைய தலைமுறையினரை அதில் இருந்து மீட்டெடுத்து, ‘நெருக்கமான நண்பர்களுடன் ஒன்றாக அமர்ந்து பேச வேண்டும், தனியாக வாழாதீர்கள்’ என்ற நடிகர் சிவகுமாரின் சமீபத்திய கோவை மேடை தத்துவத்திற்கு அசல் அச்சான்றாக இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிக்கு போடப்பட்டு இருந்தது.

இதற்காக இன்று அதிகாலை முதலே ஆர்.எஸ்.புரம் டி.பி. ரோட்டில் போக்குவரத்து முற்றிலுமாக மாற்றி அமைக்கப்பட்டு, அந்த வீதியே பொதுமக்களின் அசாத்திய விளையாட்டு மைதானமாக மாற்றப்பட்டது.

அதிகாலை 6 மணிக்கே ‘ஃபுல் எனர்ஜி’யோடு புத்தாடை அணிந்து திரண்ட ஆயிரக் கணக்கான இளம் பெண்கள், வாலிபர்கள் மற்றும் பிஞ்சுச் சிறுவர்கள், முதியவர்கள் எனப் பலரும் இந்த ‘மாஸ்’ கொண்டாட்டத்தில் களம் இறங்கினர். சாலையின் நடுவே அமைக்கப்பட்டு இருந்த பிரம்மாண்ட மேடையில் டி.ஜே (DJ) பாப் இசையின் அதிரடி ‘பீட்ஸ்’ ஒலிக்கத் தொடங்கியதும், கோவையின் துள்ளல் இளைஞர்கள் அனைவரும் கைகளை உயர்த்தி, அனல் பறக்க ஆடிப் பாடித் தங்களது மகிழ்ச்சியை வெளிக் கொணர்ந்தனர்.

சினிமா பாடல்களுக்குப் போட்டிப் போட்டுக் கொண்டு இளைஞர்கள் போட்ட ‘குத்தாட்டம்’ ஒட்டுமொத்த சாலையையும் அதிரவைத்தது.

ஆடல், பாடல் மட்டுமின்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் வகையில் பல்வேறு யோகா மற்றும் உடற்பயிற்சி (Fitness) நிகழ்வுகளும் வீதியின் மறுபுறம் ‘லைவ்’ ஆக நடத்தப்பட்டன.

கயிறு இழுத்தல் மற்றும் பாரம்பரியக் கபடி, நொண்டி போன்ற அசல் தெருவோர விளையாட்டுகளில் இளைஞர்கள் தங்களின் நரம்புகளை முறுக்கேற்றி விளையாடினர்.