• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மாணவர்கள் ஆபத்தான வகையில் இருசக்கர வாகனம் ஓட்டியதால் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு..,

BySeenu

Jul 19, 2026

நேற்று இரவு பொள்ளாச்சி ரோடு ஏழூர் பிரிவு பகுதியில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான வகையில் இருசக்கர வாகனம் ஓட்டியதை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ததை அடுத்து அந்த பதிவுகள் வைரலானது.

இதனை தொடர்ந்து கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன்குமார் அவர்களின் உத்தரவின் பேரில்,,கருமத்தம்பட்டி மற்றும் பேரூர் காவல் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளர்கள் கரிகால் பாரிசங்கர் சுரேஷ், மேற்பார்வையில் செட்டிபாளையம் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஐந்து இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த 11 மாணவர்களுடைய பெற்றோர்களை காவல் நிலையம் வரவழைத்து அவர்களுக்கு அறிவுரை கூறியதுடன் மோட்டார் வாகன சட்டப்படி மற்றும் பி என் எஸ் எஸ் சட்டப்படியும் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இனி மேற்கொண்டு கோவை மாவட்டத்தில் 18 வயதுக்கு குறைவான மாணவர்கள் மற்றும் மாணவிகள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டினால் அவர்களுடைய பெற்றோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை செட்டிபாளையம் காவல்துறைய ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் பார்வையிட்டு மாணவர்களின் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.