• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

125 நாள் வேலைத்திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன்..,

ByM.I.MOHAMMED FAROOK

Jul 21, 2026

மத்திய அரசின் VBG–RAMG 125 நாள் வேலைத்திட்டம் நாடு முழுவதும் இம்மாதம் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் இத்திட்டத்தின் பணிகளை புதுச்சேரி அரசின் அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் தொடங்கி வைத்தார்.

திருநள்ளாறு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கண்ணாப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள மேலக்குளத்தை சுமார் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிக்கான பூமி பூஜையை அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் செய்து வைத்து, பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்தப் பணிகள் மூலம் 5,415 வேலை நாட்கள் உருவாக்கப்பட உள்ளதாகவும், உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், நீர்நிலைகள் பாதுகாக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயரவும், விவசாயத்திற்கும் பயனளிக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரி அருணகிரிநாதன், கண்ணாப்பூர் கிராம மக்கள், VBG–RAMG 125 நாள் வேலைத்திட்ட பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.