• Sat. May 30th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

சாக்குலுத்து மெட்டு சாலையை மிக விரைவில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க இருப்பதாக எம் எல் ஏ தகவல்..,

BySubeshchandrabose

May 30, 2026

தேனி மாவட்டம் அண்டை மாநிலமான கேரளாவை இணைக்கும் இணைப்பு சாலையாக குமுளி சாலை, கம்பம் மெட்டு சாலை மற்றும் போடி மெட்டு சாலை அமைந்துள்ளது.

இந்த வழித்தடங்களின் வழியாக நாள்தோறும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளிகள் ஜீப் வாகனங்கள் மூலம் ஏலத்தோட்ட வேலைக்காக சென்று வருகின்றனர்.

இதற்கிடையே தேவாரம், பண்ணைப்புரம், கோம்பை உள்ளிட்ட கிராமப்புறங்களில் இருந்து கேரளாவிற்கு செல்வதற்கு போடி மெட்டு சாலை அல்லது கம்பம் மெட்டு சாலை வழியாக சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்று கூலி தொழிலாளிகள் பணி செய்து வருகின்றனர்.

ஆனால் தேவாரத்தில் இருந்து அருகே உள்ள சாக்குளத்துமெட்டு சாலை வழியாக கேரளாவிற்கு வெறும்5 கிலோ மீட்டர் தூரத்தில் சென்றடையும் வகையில் சாக்குலுத்து மெட்டு சாலை உள்ளது.

இந்த சாலை அடர்ந்த வனப்பகுதிக்குள் இருப்பதால் இந்த சாலை அமைப்பதற்கு பல்வேறு சிக்கல்கள் உள்ளது.

இந்த சாலை அமைக்க வேண்டும் என தொடர்ந்து தேவாரம் பகுதி மக்கள் பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று இந்த சாக்குலுத்து சாலை அமைப்பது குறித்து கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா இந்த சாலை பகுதியில் நடை பயணமாக சென்று தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

வனத்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் சாக்குலுத்து மெட்டு சாலை மீட்பு குழுவினர் ஏராளமான கூலித் தொழிலாளிகள் பொதுமக்கள் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தினர் ஆகியோருடன் இணைந்து

இந்த சாலை ஆய்வில் அவர் ஈடுபட்டுள்ளார்

சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் செல்லும் இந்த வனப்பகுதிச்சாலையில் ஆய்வு செய்வதற்கு முன்பாக வனத்துறை அதிகாரிகளிடம் இந்த சாலை குறித்த விவரங்களை கேட்டறிந்தார் மேலும் இந்த சாலை அமைப்பது அதற்கான சாத்திய கூறுகள் குறித்து வருவாய் துறை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார் மேலும் இந்த சாலை அமைப்பதால் பொதுமக்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் அவர் கலந்துரையாடினார்

அதனைத் தொடர்ந்து தமிழக கேரள எல்லையில் உள்ள இந்த சாக்குலுத்தும் மெட்டு மலைச்சாலை பகுதியில் நடைபயணமாக சென்று கேரளா எல்லை பகுதிக்கு சென்றடைய உள்ளார் மேலும் அவரை அங்கு வரவேற்பதற்காக கேரளப் பகுதியைச் சார்ந்தவர்களும் தயார் நிலையில் உள்ளனர்

இந்த ஆய்வு குறித்து எம் எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா கூறுகையில் இந்த சாலை அமைந்தால் இந்த பகுதி மக்களுக்கு மிகவும் பேர் உதவியாக இருக்கும் அதே போன்று மருத்துவம் வர்த்தகம் போன்றவை எளிதாக கிடைக்க பெறும் மேலும் பல கிலோ மீட்டர் சுற்றி செல்லும் கூலித் தொழிலாளிகளின் சுமை குறைந்து எளிதாக அவர்கள் கூலி வேலைக்கு சென்று வரும் வகையில் இந்த சாலை அமையப்பெறும் இந்த சாலை அமைப்பது குறித்து ஆய்வு செய்து இந்த ஆய்வறிக்கையை தமிழக முதல்வர் விஜயிடம் கொண்டு சென்று அதன் மூலம் இந்த சாலை அமைப்பதற்கு உறுதியாக நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.