• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சுப்ரமணியசாமி திருக்கோவிலில் பால் அபிஷேகம் செய்த பாலை சாக்கடையில் கலந்து விட்ட கோவில் நிர்வாகம் ..,

ByKalamegam Viswanathan

May 30, 2026

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் மற்றும் நேர்த்திக்கடனாக பல ஆயிரகணக்கான பக்தர்கள் நேர்திக் கடனாக பால்குடம் எடுத்து வந்தனர்.

பக்தர்கள் எடுத்து வந்த பால் குடத்தில் இருந்துவிசாக கொரடு மண்டபத்தில் வைக்கப்பட்ட சண்முகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது

கடவுளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பாலை முறையாக சேகரிக்காத கோவில் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் அபிஷேக பாலை கோவில் நிர்வாகம் சாக்கடையில் திறந்து விட்டது இதனால் பக்தர்கள் மன வேதனை அடைந்தனர்.

விரதம் இருந்து கொண்டுவரும் அபிஷேக பாலை கோவில் நிர்வாகம் முறையாக பக்தர்களுக்கு வழங்காமல் சாக்கடையில் கலந்து விடுவது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.