மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அயன் தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி நாராயணபுரம் ஆகிய கிராமங்களில் நேற்று மாலை பெய்த கன மழை காரணமாக 10 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கிய சேதம் அடைந்தது.

ஏக்கருக்கு 30,000 முதல் செலவு செய்த நிலையில் நெருப்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் சிறு விவசாயிகள் பெரு விவசாயிகள் என பிரித்து பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யும் தமிழக அரசு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பயிர் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளை தரம் பிரித்து பார்க்கக் கூடாது என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஊத்துக்குளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம் கூறுகையில் நேற்று பெய்த மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகும் நிலைக்கு சென்றுள்ளது.

சுமார் 300 ஏக்கர் இந்த பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்தது ஆனால் தற்போது அனைத்தும் நீரில் மூழ்கி காணப்படுகிறது. இன்னும் ஒரு மழை பெய்தால் மீதம் உள்ள ஏக்கரில் உள்ள நெற்பயிர்களும் சேதமடைந்து விடும். இதன் காரணமாக சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். வருவாய்த்துறையினர் பாதிக்கப்பட்டுள்ள நெல் பயிர்களை நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அரசுக்கு தெரிவிக்க வேண்டும் மேலும் ஏக்கருக்கு 30,000 நஷ்ட ஈடு பெற்று தர வேண்டும் பயிர் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.

விவசாய நிலங்களில் தேங்கியுள்ள தண்ணீரை விவசாயிகள் தற்போது வெளியேற்றி வருகின்றனர் மேலும் மழைநீர் வெளியேறுவதற்கு வடிகால் வசதியும் இல்லாத நிலையில் வயல்களுக்குள் தண்ணீர் தேங்கி கிடக்கிறது தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்



