கோவையின் மிக முக்கிய சாலையாக அவிநாசி சாலை உள்ளது, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் போக்குவரத்து சிக்னல்கள் சரி வர இயங்காத காரணத்தினால், கடந்த இரண்டு நாட்களாக அடுத்தடுத்து தொடர் விபத்துகள் அரங்கேறி வருகின்றன.
சிக்னல் குளறுபடிகளால் வாகன ஓட்டிகளின் மாறி, விபத்துகள் நடப்பது கோவை மக்கள் இடையே கடுமையான பீதியை ஏற்படுத்தி உள்ளது.

தொழில் நகரான கோயம்புத்தூரின் மிக முக்கியமான பிரதான போக்குவரத்து அவிநாசி சாலை விளங்கி வருகிறது. இந்தச் சாலையில் பகல் நேரங்களில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருக்கும் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சிக்னல்கள் முறையாக ‘ஆட்டோமேஷன்’ முறையில் இயங்காமல் முற்றிலுமாக முடக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்து உள்ளன.
இதன் காரணமாகப் அதிவேகமாக வரும் வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி, கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் அடுத்தடுத்து இரண்டு விபத்துகள் நடந்து உள்ளன.
சம்பவம் 1:
சிலைக்குள் புகுந்த கார்!
நேற்று முன்தினம் நள்ளிரவு அவிநாசி சாலையின் முக்கிய ஜங்ஷனில் அமைந்து உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய மூத்த தலைவர்களின் சிலைகள் அமைந்து இருந்த ரவுண்டானா (Roundabout) பகுதியில் இந்த முதல் விபத்து அரங்கேறியது.
நள்ளிரவில் சிக்னல் விளக்குகள் சரி வர வேலை செய்யாததால், அதிவேகமாக வந்த ஒரு கார், கட்டுப்பாட்டை இழந்து ‘சிக்னல்’ பார்டர் எக்ஸ்ரே-வை தாண்டி, தலைவர்களின் சிலைகள் இருந்த ரவுண்டானாவின் பாதுகாப்புச் தடுப்புகளை உடைத்து அதிவேகமாகப் புகுந்தது. காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்த இந்தச் சம்பவத்தில், நல்வாய்ப்பாகப் பெரிய அளவிலான உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
சம்பவம் 2:
லாரி – அரசு பேருந்து மோதல்; மதில் சுவர் தரைமட்டம்!
இந்த விபத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், இன்று அதிகாலை மீண்டும் ஒரு கொடூர விபத்து அவிநாசி சாலையில் நிகழ்ந்து உள்ளது. அதிகாலை நேரத்தில் அவிநாசி சாலையில் வந்து கொண்டு இருந்த அரசுப் பேருந்து (Government Bus) மீது, அதிவேகமாக வந்த கனரக லாரி (Lorry) ஒன்று பயங்கர வேகத்தில் மோதியது.

லாரி மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மற்றும் லாரி, அருகில் இருந்த ஒரு கட்டிடத்தின் மதில் சுவரை இடித்துக் கொண்டு உள்ளே புகுந்தது.
அதிகாலை நேரம் என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
எனினும், மோதிய வேகத்தில் கட்டிடத்தின் மதில் சுவர் அடியோடு இடிந்து தரைமட்டமானதுடன், லாரியின் முன் பகுதி சுக்குநூறாக நொறுங்கியது.
அவிநாசி சாலையில் கடந்த இரண்டு நாட்களில் நடந்து உள்ள இந்தத் தொடர் விபத்துகளுக்கு, இரவு நேரங்களில் அணைக்கப்படும் சிக்னல்களும், எச்சரிக்கை ‘ப்ளிங்கர்’ (Yellow Blinkers) விளக்குகள் இல்லாததுமே முக்கியக் காரணம் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.



