• Wed. Jun 10th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தான பிரம்மோற்சவ விழா..,

ByM.I.MOHAMMED FAROOK

May 26, 2026

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தான வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா மே13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இக்கோவிலின் பிரம்மோற்சவ விழாவினை முன்னிட்டு தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஓலைச் சப்பரத்தில் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.

பஞ்சமூர்த்திகள் சகோபுர வீதியுலா முன்னிட்டு கேரள பாரம்பரிய வாத்தியம், செண்டை மேளம் முழங்க வீதியுலா நடைபெற்றது. நிகழ்ச்சியில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீ மத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், ஆலய நிர்வாக அதிகாரி சுப்ரமணியன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருத்தேரோட்டம் 27ம் தேதியும், 28ம் தேதி ஸ்ரீ சனிபகவான் தங்ககாக்கை வாகனத்தில் வீதியுலாவும், 29ம் தேதி தெப்போற்சவம் நடைபெற உள்ளது.