• Fri. Nov 6th, 2026

புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்கசாமி ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை வெளியிட்டார்!

Byஜெ.துரை

Sep 21, 2026

மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. பியூலா மகிழ் அவர்கள் தயாரிப்பில், உருவாகியுள்ள திரைப்படம் ‘துரோகம் பழகு’.

இத்திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்கசாமி அவர்கள் வெளியிட்டு, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

சினிமாவில் பொதுநலன் சார்ந்த கருத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் நாயகன் தக்க்ஷன் விஜய் அவர்களையும் முதலமைச்சர் அவர்கள் பாராட்டினார்.

மேலும், திரைப்படத்தின் ரஃப் கட் காட்சிகளைப் பார்வையிட்ட முதலமைச்சர் அவர்கள், படக்குழுவினரின் பணியை வெகுவாகப் பாராட்டியதோடு, திரைப்படத்தின் முழுக் குழுவினரின் கடின உழைப்பிற்கும் தனது வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்தார்.

இப்படத்திற்கு பாலா மற்றும் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர்.

திரைப்படத்திற்காக வைரமுத்து அவர்கள் அழகான வரிகளுடன் சிறப்பான பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.

இப்பாடலை வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார்.

இப்படத்தை சீயோன் ராஜா இயக்கியுள்ளார்.

‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளதாகவும்,

அதனைத் தொடர்ந்து திரைப்படம் வெகு விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது,என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.