• Mon. May 25th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

அனைத்து பணிகளையும் ஆற்ற சென்னை செல்கிறேன் – அமைச்சர் செங்கோட்டையன்..,

BySeenu

May 25, 2026

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், கடந்த ஒரு மாதமாக கடுமையான உழைப்பின் காரணமாக வழக்கம்போல் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதாக தெரிவித்தார். ஆண்டுக்கு இருமுறை மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து கொள்வது தனது வழக்கம் என்றும், இம்முறையும் இரண்டு நாட்கள் தங்கி பரிசோதனை செய்ததாக கூறினார். அனைத்து பரிசோதனை முடிவுகளும் சரியாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும், உடல்நிலை நன்றாக உள்ளதால் அனைத்து பணிகளையும் ஆற்ற சென்னை செல்கிறேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என கூறப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, தாம் வழக்கமாக சிகிச்சை பெறும் மருத்துவமனை மற்றும் உறவினர் மருத்துவமனை என்பதாலேயே அங்கு பரிசோதனை செய்ததாக விளக்கம் அளித்தார். ஓய்வும் அங்கேயே எடுப்பேன் என்றும், இலவசமாக கிடைக்கும் சலுகை என்பதால் அரசிடம் இருந்து நிதி பெற வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.

சூலூர் சிறுமி கொலை வழக்கு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, ஐஜி ஏற்கனவே தெளிவான விளக்கம் அளித்துள்ளதாகவும், முதலமைச்சரும் சட்டத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், உடனடியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், பெண்களுக்கான ‘விடியல் பயணம்’ உள்ளிட்ட திட்டங்கள் குறித்து பேசிய அவர், திமுக அரசு பல ஆண்டுகளுக்கு பிறகு இத்தகைய திட்டங்களை வழங்கியிருப்பது அனைவருக்கும் தெரியும் என்றும், அரசின் நிதிநிலைக்கு ஏற்ப ஒவ்வொரு திட்டமும் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றும், திட்டங்கள் குறித்து இறுதி முடிவை முதலமைச்சர் எடுப்பார் என்றும் தெரிவித்தார்.