மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ராஜுமற்றும் ராமர் நினைவு முதலாம் ஆண்டுமாநில அளவிலான 40 வயது க்கு மேற்பட்ட மாஸ்டர்ஸ் ஆக்கி போட் டிகள் 2 நாட்கள்நடந்தது. இதன் பரிச ளிப்பு விழாவிற்கு மதுரை ரெட்டி நல சங்க தலைவர் ராஜா பூர்ண சந்திரன் தலைமை தாங்கி பரிசுகள் வழங்கினார்.

தாய் பள்ளி நிறுவனர் எஸ். வி. காந்தி, எல்.ராஜு டிரஸ்ட் செயலாளர் சரவணன், மாநகராட்சி உதவி பொறியாளர் பாஸ்கர பாண்டியன்,சப் இன்ஸ்பெக்டர் முரளி,சிவக்குமார், ரவிச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.எவர்கிரேட் ஆக்கி கிளப் செயலாளர் சிதம்பரம் வரவேற்றார். இந்த போட்டியில்மதுரை சதர்ன் ஸ்டார் ஆக்கிஅணியும், வாடிப்பட்டி எவர்கிரேட் ஆக்கிஅணியும் விளையாடியதில் 4:3 என்ற கோல் கணக்கில் மதுரை சதர்ன் ஸ்டார் அணி வெற்றியடைந்துசாம்பியன் பட்டம் வென்று முதல் பரிசு சுழல் கோப்பையுடன் ரூ.30 ஆயிரமும், இரண்டாவது பரிசு எவர்கிரேட் ஆக்கிஅணி சுழல் கோப்பை ரூ.20 ஆயிரமும்,மூன்றாவது பரிசு நீலகிரி எங் பிரதர்ஸ் அணி சுழல் கோப்பை ரூ.15ஆயிரமும்,நான்காம் பரிசு சங்ககிரி எஸ்.எஸ்.ஓ.எஸ் அணி சுழல் கோப்பை ரூ.10ஆயிரமும் பெற்றது.
இதில் உடற்கல்வி ஆசிரியர் கள் சுரேஷ்,வெள்ளைச்சாமி, சந்திர மோகன், பாபு பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் எவர்கிரேட் ஆக்கி கிளப் தலைவர் உடற்கல்வி ஆசிரியர் பி.ஜி.ராஜா நன்றி கூறினார்.





