• Wed. Oct 28th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் அபாயம்..,

ByKalamegam Viswanathan

Oct 28, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த கன மழை காரணமாக ஆங்காங்கே சாலைகளில் மழைநீர் தேங்கி வெளியேறாமல் உள்ளது இதன் காரணமாக சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதி சாலைகளில் மழை நீரால் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது

குறிப்பாக சோழவந்தான் அருகே தச்சம்பத்து திருவேடகம் சாலை பெண்கள் கழிப்பறை அருகே தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக முழங்கால் அளவு மழை நீர் தேங்கி வடியாமல் நின்றது

இதன் காரணமாக சாலையின் நடுவே பெரிய அளவில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது இதனால் சோழவந்தானிலிருந்து மதுரை மற்றும் திருமங்கலம் செக்கானூரணி செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வாகனங்களை பள்ளத்தில் இறக்கி கீழே விழுந்து காயம் ஏற்பட்டு செல்வதாக அருகில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகின்றனர்.

ஏற்கனவே சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்யாததால் அடிக்கடி வாகனங்கள் விபத்தில் சிக்குவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்த நிலையில், தற்போது பெய்து வரும் மழை காரணமாக சாலையின் நடுவிலேயே பெரிய பள்ளம் ஏற்பட்டு வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.

மேலும் மழை நீர் தேங்குவதால் அருகில் குடியிருப்பவர்கள் இரவில் தூங்க முடியாமல் சிரமப்படுவதாகவும் வாகனத்தில் வருபவர்கள் பள்ளத்தில் விழும்போது சத்தம் ஏற்பட்டு வீட்டில் உள்ளவர்கள் வந்து அவர்களுக்கு உதவி செய்வதும் தொடர் கதையாக நடப்பதாக கூறுகின்றனர். ஆகையால் பல்வேறு பகுதிகளில் மழை காரணமாக சேதம் அடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.