தமிழக அரசால் சென்னை கோபாலபுரத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான பெண்கள் பிரிவு குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த இரண்டாம் ஆண்டு பிகாம் பாடப்பிரிவு மாணவி சௌமியா ஸ்ரீ தேர்வு செய்யப்பட்டு கலந்து கொண்டார். போட்டியில் முடிவில் மாணவி சௌமியா ஸ்ரீ மாநில அளவில் வெண்கல பதக்கம் வென்று மூன்றாம் இடத்தை பெற்றார்.
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலர் குமார மணிமாறன் ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் அ.பா.செல்வராஜன், இணைச்செயலாளர் ராஜேஷ், கல்லூரி முதல்வர் பாலமுருகன் ஆகியோர் வாழ்த்தினார்கள்




