• Wed. Oct 28th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

எழுமலை பெரிய கண்மாய் மற்றும் நீர் வழித் தடங்களை ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்..,

ByP.Thangapandi

Oct 28, 2026

உசிலம்பட்டி அருகே எழுமலை பெரிய கண்மாய் மற்றும் நீர் வழித் தடங்களை
நீர்வளத்துறை திட்டம் மற்றும் வடிவமைப்பு துறை அதிகாரிகள்
ஆய்வு மேற்கொண்டனர்*

வைகை அணையில் இருந்து உசிலம்பட்டி 58 கால்வாய் மூலம் சுமார் 35 கண்மாய்களுக்கு நீர்ப்பாசனம் பெறுகிறது.,

இந்த நிலையில் எழுமலைப் பகுதிக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என எழுமலை 18 பட்டி கிராமக் கால்வாய் பாசனத் திட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.,

இதில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் 252 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியகண்மாய் அமைந்துள்ளது.,

இந்த கண்மாய்க்கு வரும் நீர் வழித்தடங்கள் மற்றும் இந்தக் கண்மாய் நிரம்பி உபரிநீராக சுமார் 10 க்கும் மேற்பட்ட சிறிய கண்மாய்கள் நிரம்பி ஆயிரக்கணக்கான நிலங்கள் பாசன வசதி பெறும் எனக் கூறப்படுகிறது.,

இந்த நிலையில் ஏழுமலை பெரிய கண்மாய், நீர் வழித்தடங்கள் மற்றும் சுமார் 10 க்கும் மேற்பட்ட சிறிய கண்மாய்களை நீர்வளத் துறை திட்டம் மற்றும் வடிவமைப்பு குழு உதவி செயற்பொறியாளர்கள் ருக்மணி மற்றும் ராஜேஷ் குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.,

இதில் வைகை அணையிலிருந்து வரும் 58 கால்வாய் திட்டத்தை விரிவு படுத்தி எழுமலை பகுதி வரை நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக எழுமலை 18 பட்டி கிராமக் கால்வாய் பாசனத் திட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் தொடர்ந்து மனு அளித்தும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.,

இதனால் இந்தத் திட்டத்தால் 10 க்கும் மேற்பட்ட கண்மாய்கள், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறப்படுகிறது.,

இந்த நிலையில் இன்று எழுமலை பெரிய கண்மாய், தாழையூத்து, மொட்டனூத்து உள்ளிட்ட நீர் வழித்தடங்கள் மற்றும் காக்கன்குளம் கண்மாய், ஆத்தங்கரைபட்டி கண்மாய், சூலப்புரம் கண்மாய், திருமாணிக்கம் கண்மாய், மீனாட்சிபுரம் கண்மாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நீர்வளத்துறை திட்ட மற்றும் வடிவமைப்பு குழு அதிகாரிகள் முற்கட்டமாக ஆய்வு மேற்கொண்டனர்.,

இப்பகுதிக்கு 58 கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் தற்போதுள்ள நீர் வழித்தடங்களின் நிலை மற்றும் கால்வாய் திட்டத்தை விரிவு படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.,