புதுக்கோட்டையில் தமிழ்நாடு டாஸ்மார்க் விற்பனையாளர்கள் நல சங்கத்தின் மாநில அமைப்பாளர் S.சௌமியமூர்த்தி மற்றும் மாவட்டத் தலைவர் K. குமார் தலைமையில் மே ஓன்று உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர்.

அப்போது தொழிலாளர்களின் ஒற்றுமையை மேம்படுத்தும் விதமாகவும் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கான நல்ல பல கருத்துக்களை எடுத்துரைத்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்டம் முழுவதும் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட டாஸ்மார்க் விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.




