திண்டுக்கல்லில் வாக்கு எண்ணும் மையம் ஆபத்தில் உள்ளதால் எண்ணும் மையத்துக்கு செல்பவர்கள் அச்சத்தில் உள்ளனர். திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள அண்ணா பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடக்கிறது.

இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை மையமாக இந்த மையம் உள்ளது. ஆனால் இங்குள்ள கட்டிடங்கள் பழுதடைந்து எப்போது விழும் என்ற நிலையில் உள்ளது. இதனால் கட்டிடங்கள் விரிசல் ஏற்பட்டுள்ளதால் இந்த வாக்கு எண்ணிக்கை மையத்துக்குச் செல்லும் கட்சிக்காரர்கள் ஒருவித அச்சத்தில் உள்ளனர்.
எப்பொழுது வேண்டுமானாலும் விபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் நிலையில் இந்த மையம் உள்ளது. முற்றிலும் இடிந்து உள்ள சுவர் இந்த இடத்தில் தான் மின் இணைப்புகள் அனைத்தும் உள்ளன. தற்போது ஆத்தூர் சட்டமன்ற வாக்கு என்னும் மையம் பழுதான சுவரின் அருகில் உள்ளது. இதனால் மையத்துக்கு செல்பவர்கள்ஒருவித அச்ச உணர்வுடன் உள்ளனர்.




